கிணத்துக்கடவில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கிணத்துக்கடவில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:17

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தொகுதியில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 514 பேர் ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 312 பேர் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 42 பேர் உட்பட மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 868 வாக்காளர்கள் உள்ளனர்.



மொத்தம் 485 ஓட்டு சாவடிகள் உள்ளன.நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவின்போது, 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 788 ஓட்டுகள் பதிவாகின. இதில், ஆண்கள் 62.38 சதவீதம், பெண்கள் 60.99 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர் 23.81 சதவீதம் என, 70.30 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.கடந்த 2016 சட்டசபை தேர்தலில், மொத்தம் இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 116 வாக்காளர்களில், இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 989 பேர் ஓட்டுகளை பதிவு செய்தனர். மொத்தம் 70 சதவீதம் ஓட்டு பதிவு நடந்துள்ளது. 2016 தேர்தலோடு ஒப்பிட்டால், நேற்று முன் தினம் நடந்த தேர்தலில், 0.30 சதவீதம் கூடுதலாக ஓட்டு பதிவாகியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X