இந்தோ திபெத் எல்லை படைவீரர்களுக்கு பரிசோதனை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
இந்தோ திபெத் எல்லை படைவீரர்களுக்கு பரிசோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:17

சிவகங்கை : இலுப்பகுடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், நேற்று அனைத்து வீரர்களுக்கும் சிவகங்கை நகர் நல மையத்தில் பரிசோதனை செய்தனர்.



அரசனுார் அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விடுமுறை காலங்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று திரும்புகின்றனர்.தற்போது கொரோனா 2 வது அலை பரவலால் இதன் வேகம் அதிகரித்து வருகிறது. இதுபோன்று வெளி மாநிலங்களில் இருந்து வரும் வீரர்களுக்கு கொரோனா பரவுகிறது. தற்போது இங்குள்ள ஒரு வீரருக்கு கொரோனா பரவியதால், அங்குள்ள அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள பயிற்சி மைய டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.



இதையடுத்து நேற்று பாதுகாப்பு படை பயிற்சி மைய வீரர்கள் சிவகங்கை நகர்நல மையத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இப்பயிற்சி மையத்தில் புதிதாக 644 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.இவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, ஓடிசா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இங்கு வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பயிற்சி மைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X