ஒரே நாளில் மாடு முட்டியதில் 12க்கும் மேற்பட்டோர் காயம்  | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஒரே நாளில் மாடு முட்டியதில் 12க்கும் மேற்பட்டோர் காயம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:24

திருப்புவனம் : திருப்புவனத்தில் தினசரி கோயில் மாடு முட்டியதில் பலர் காயமடைந்து வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் மாடு முட்டியதில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



பாசாங்கரை காளிகோயிலுக்கு நேர்த்தி கடனாக விடப்படும் கோயில் மாடுகள் திருப்புவனம் பகுதியில் உலா வருகின்றன. தினசரி சந்தை, வாரச்சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகளை உண்டு வளரும் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கோயில் மாடுகளை கோசாலையில் அடைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த வேளையில் நேற்று முன்தினம் கோயில் மாடு முட்டியதில் ராஜா 25, சுரேஷ், பழனி மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதில் இருவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோயில் மாட்டை பிடித்து வைத்து கால்நடை துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் வரவே இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வரும் கோயில் மாடு பிரச்னையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X