மானாமதுரையில் திருவிழா வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுமா | சிவகங்கை செய்திகள் | Dinamalar
மானாமதுரையில் திருவிழா வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:26

மானாமதுரை : மானாமதுரையில் சித்திரை திருவிழா துவங்கும் முன் வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மானாமதுரையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு வரும் 17 ந் தேதி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.திருவிழா நடைபெறும் 10 நாட்களின் போது வைகை ஆற்றுக்குள் தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்,மேலும் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினங்கள்,குழந்தைகள் விளையாட்டுக்கள், மற்றும் திருவிழா கடைகள் கோயிலுக்கு எதிரே வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும்.இந்தாண்டு திருவிழா ஆரம்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில்,பேரூராட்சி நிர்வாகம் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை துவக்காமல் உள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X