பரமக்குடியில் ஆண்களை விட பெண்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் ஆண்களை விட பெண்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:30

பரமக்குடி : பரமக்குடி தொகுதியில் நடந்த தேர்தலில் ஆண்களை விட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர்.



பரமக்குடி தொகுதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 590 ஆண்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 48 பெண்கள் மற்றும் 16 இதர பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 458 பேர் அதிகம் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 பேர் களத்தில் இருந்தனர்.பரமக்குடியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.



இதில் ஆண்கள் 85 ஆயிரத்து 34 பேரும், பெண்கள் 95 ஆயிரத்து 431 பேரும் மற்றும் இதர பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 468 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் 10 ஆயிரத்து 397 பேர் அதிகம் வாக்களித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X