சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:34

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஏ.மேலையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.



இத்தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையான கால்வாய் இல்லாததால் அங்குள்ள சிமென்ட் சாலையிலேயே தேங்கி கிடக்கிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.மேலும் 6 மீட்டர் நீளமுள்ள இந்த சிமென்ட் சாலையானது சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மூன்று மீட்டர் அளவுக்கு சுருங்கி பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X