வாக்காளர்கள் மவுன புரட்சி அரசியல் கட்சியினர் கலக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:18

புதுச்சேரி; பெரும்பாலான தொகுதிகளில் 80 சதவீதத்தை தாண்டி ஓட்டுகள் பதிவாகி உள்ளதால், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் கடந்த 2019ல் ஓட்டுப் பதிவு 80 சதவீதத்தை தாண்டி உள்ளது. இதில், 13 தொகுதிகள் முழுவதும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளாகும்; 6 தொகுதிகள் நகரப் பகுதியில் அமைந்துள்ள தொகுதிகளாகும்.அதாவது, மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் அதிகளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைப்பதற்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்று இரண்டாவது அலை துவக்கம், கொளுத்தும் கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்து 80 சதவீதத்தையும் தாண்டி ஓட்டுகள் பதிவாகி உள்ளது அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.'ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். கவர்னர் - முதல்வர் இடையிலான மோதலால் அரசின் செயல்பாடுகள் முடங்கியதால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட விஷயங்களை பொருட்படுத்தாமல் ஓட்டுச் சாவடிகளுக்கு திரண்டு வந்து தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் ஓட்டுகளாக பதிவு செய்துள்ளனர்' என, எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.'பொதுவாக, எந்த அரசாக இருந்தாலும் அனைத்துதரப்பு மக்களையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால், நியாயமான விஷயங்களில்கூட ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்காமல் எதிர்கட்சிகள் எதிரிகட்சிகளாக நடந்து கொண்டன.5 ஆண்டுகளாக செயல்படாமல் மவுனம் காத்தது, ஆட்சி கவிழ்ப்பு போன்ற எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் ரசிக்கவில்லை. அதனால், திரண்டு வந்து எதிர்கட்சிகளுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர்' என, ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு தரப்பு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஓட்டுப் பதிவு தங்களுக்கே சாதகம் என பல்வேறு கணக்குகளை அலசி ஆராய்ந்து விவாதம் நடத்தி கொண்டுள்ளனர்.அரசியல் கட்சியினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் வாக்காளர்கள் மவுன புரட்சி நடத்தி உள்ளனர். அது, யாருக்கு சாதகம் என்பது ஓட்டு பெட்டிகளை திறந்து எண்ணும்போதுதான் வெட்ட வெளிச்சமாகும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X