புதுச்சேரியில் 81.70 சதவீதம் ஓட்டுப்பதிவு; தேர்தல் துறை அறிவிப்பு | செய்திகள் | Dinamalar
புதுச்சேரியில் 81.70 சதவீதம் ஓட்டுப்பதிவு; தேர்தல் துறை அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:19

புதுச்சேரி; புதுச்சேரி ஓட்டு பதிவு சதவீதம் 81.70 ஆக பதிவாகியதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக 1558 ஓட்டுப்பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 81.64 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாகவும், ஓட்டுப்பதிவு குறித்த முழு விபரம், படிவம் 17 சி சரிபார்த்த பின்பு அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று காலை ஓட்டுபதிவு சதவீதம் குறித்து இறுதி செய்யப்பட்ட தகவலை புதுச்சேரி தேர்தல் துறை வெளியிட்டது. அதில், புதுச்சேரி ஓட்டு சதவீதம் 81.70 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X