நுங்கு, தர்பூசணி விலை அதிகரிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நுங்கு, தர்பூசணி விலை அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:42

கள்ளக்குறிச்சி; கோடைக்காலம் துவங்கியதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பக்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதையொட்டி உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதில், நுங்கின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1 நுங்கு 3 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த ஆண்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழம், தற்போது 15 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளநீர் தற்போது 35 - 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X