நடை பாதையை மறித்து சுவர் பொதுமக்கள் சாலை மறியல் | கடலூர் செய்திகள் | Dinamalar
நடை பாதையை மறித்து சுவர் பொதுமக்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:46

வடலுார்; வடலுாரில் நடை பாதையை மறித்து சுற்றுச்சுவர் கட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வடலுார் கோட்டக்கரை கோழிப்பள்ளம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் இன சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடம் உள்ளது.காட்டுநாயக்கர் இன மக்கள் பல ஆண்டுகளாக நடைபாதையாக பயன்படுத்தி வந்த இடத்தை மறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது.அப்போது அப்பகுதி மக்கள் வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை மீண்டும் பிரச்னைக்குரிய இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடலுார் - விருத்தாசலம் சாலையில் வடலுார் சபை பஸ் நிறுத்தம் அருகே காலை 10:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வடலுார் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி குறிஞ்சிப்பாடி தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, அனைவரும் 10:15 மணியளவில் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X