தவறி விழுந்து பெண் சாவு | கடலூர் செய்திகள் | Dinamalar
தவறி விழுந்து பெண் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:50

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பைக்கில் இருந்து, தவறி விழுந்து பெண் இறந்தார்.குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் நடராஜன், 31; இவருக்கு, பெண் பார்க்க, கடந்த 5ம் தேதி தனது தாய் கசப்புவை, 65; பைக்கில், பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, அழைத்துச்சென்றார்.சில்லாங்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே, வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, பின்னால் அமர்ந்து சென்ற கசப்பு, தவறி கீழே விழுந்துபடுகாயமடைந்தார்.உடன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம்இறந்தார்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X