புழல் ஏரிக்குள் பாயும் கழிவு நீர்; தடுக்க பொதுமக்கள் கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
புழல் ஏரிக்குள் பாயும் கழிவு நீர்; தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:59

மாதவரம்; குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், புழல் ஏரிக்குள் பாய்வதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சென்னை, மாதவரம் மண்டலம், 24வது வார்டு, சண்முகபுரம், ரட்சகன் தெருவில் உள்ள வீடுகளுக்கு, மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதிகள் இல்லை. மேலும், புழல் ஏரியை ஒட்டிய பகுதிகளில், புதிய குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், கால் நடைகளின் கழிவு ஆகியவை தெருக்களில் பரவி, சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல் ஏரிக்குள் பாய்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து, குடியிருப்புப் பகுதிகளின் சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறது. இது தொடர்ந்தால், புழல் ஏரி நீர், நஞ்சாகும் வாய்ப்புள்ளது.அதனால், சென்னை மாநகராட்சி நிர்வாகம், மேற்கண்ட பகுதியில் கால்வாய் அமைத்து, ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X