மாடி தோட்டம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி | சென்னை செய்திகள் | Dinamalar
மாடி தோட்டம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:04

சென்னை - மாடி தோட்டம் வளர்ப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி, சென்னையில் உள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, அந்த பயிற்சி மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், ஏப்., 9ம் தேதி, மாடி தோட்டம் வளர்த்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட, விருப்பம் உள்ளோர் பங்கேற்கலாம். நாள் ஒன்றுக்கு, 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இது தொடர்பான, மேலும் விபரங்களை, தலைவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், கிண்டி என்ற முகவரியிலும், 044 22250511, 2250 1960 ஆகிய தொலைபேசி எண்களிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X