அமைந்தகரை- அமைந்தகரையில், அரைகுறையாக விடப்பட்ட வடிகால் பணியால், விபத்து அபாயம் நிலவுகிறது.நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகளில், மழை நீர் தேங்காதபடி, வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில், வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது.சில இடங்களில், வடிகால் இணைக்கப்படாமலும் உள்ளது.குறிப்பாக, அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வடிகால் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. மேலும், வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே, தடுப்புகள் ஏதுவும் அமைக்கப்பட வில்லை.இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது. அரைகுறையாக விடப்பட்ட வடிகால் பணிகளை, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளதுஇது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தனர்.