ஏழே மாதத்தில் ஒன்றிய சாலை சேதம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
ஏழே மாதத்தில் ஒன்றிய சாலை சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:08

கடம்பத்துார்- கடம்பத்துார் ஒன்றியத்தில், 73 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஒன்றிய சாலை ஏழை மாதத்தில் சேதமடைந்து மோசமான நிலைக்கு சென்றது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், ராமன்கோவில் ஊராட்சிக்குட்பட்டது மடத்துக்குப்பம். இங்கிருந்து, கடம்பத்துார் செல்லும் ஒன்றிய சாலையில், 2 கி.மீ., துாரம் வரை, ஆறு மாதங்களுக்கு முன், ஒருங்கிணைந்த ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 73.68 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்பட்டது.இந்நிலையில், புதிதாக சீரமைக்கப்பட்ட ஒன்றிய சாலை, மணல் லாரிகள் சென்றதில் ஆங்காங்கே பல இடங்களில் சாலை பெயர்ந்து மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சேதமடைந்த சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சேதமடைந்த சாலை குறித்து, ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X