அரசு பஸ் இயங்காததால் கடம்பத்துார் மக்கள் அவதி | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
அரசு பஸ் இயங்காததால் கடம்பத்துார் மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:09

கடம்பத்துார்- கடம்பத்துார் பகுதியில், அரசு பஸ்கள் இயங்காததால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் பகுதியிலிருந்து, கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, சுங்குவார்சத்திரம் வழியே, காஞ்சிபுரத்திற்கு தடம் எண் 160, 162, ஆகிய அரசு பஸ்களும், டி-2 என்ற அரசு பஸ், திருவள்ளூர் - பேரம்பாக்கம் வரையிலும் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களை நம்பி, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்து வந்தனர்.கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 162 என்ற அரசு பஸ் மட்டும் காலையில் மட்டும் இயக்கப்படுகிறது.இதனால், தனியார் பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதேபோல், பூந்தமல்லியிலிருந்து, மப்பேடு, பேரம்பாக்கம் வழியாக, தக்கோலம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட தடம் எண் 591, 91பி என்ற அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், கடம்பத்துார் வழியாக, அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, திருவள்ளூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாஸ்கர் கூறுகையில், ''நான், திருவள்ளூர் கிளை மேலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ளேன். இதுகுறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X