திருவள்ளூர் மாவட்டத்தில் 1,169 பேர் பாதிப்பு உருமாறிய கொரோனாதொற்று பரவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:12

திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், உருமாறிய கொரோனா தொற்று காரணமாக, 1,169 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.



மாவட்டத்தில் இதுவரை, 30 ஆயிரம் பேர்,முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலையால், பாதிப்புக்கு உள்ளாகியோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று நிலவரப்படி, ஒரே நாளில், 208 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சிகிச்சை முடிந்து, 91 பேர் வீடு திரும்பி உள்ளனர். இரண்டாவது அலையில், இதுவரை, மாவட்டம் முழுதும், 1,169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூர் நகராட்சியில், இதுவரை, 1,165 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உள்ளனர். இதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலையில் மட்டும், 51 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.30 ஆயிரம் பேர்கொரோனா தடுப்பூசிகடந்த மாதம் முதல், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, மாவட்டம் முழுதும், 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இரண்டாவது கட்ட, தடுப்பூசி செலுத்தும் பணி, தற்போது துவங்கி, நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், இதுவரை, 9,000 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தினமும், 300 பேர் வீதம், தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.கட்டுப்பாடு அவசியம்இது குறித்து சுகாதார துறை அலுவலர் கூறியதாவது:முக கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும் என, பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், யாரும் அதை கடைப்பிடிப்பதில்லை. அபராதம் விதித்தாலும், பல நுாறு பேர் முக கவசம் அணியாமல் இருப்பதால், சிக்கல் நிலவுகிறது.ஒரு தெருவில், மூன்று குடும்பத்தினருக்கு மேல் பாதித்தால் மட்டுமே, அதை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க முடியும்.தற்போது, அதற்குண்டான சூழல் இல்லை. மேலும், கடந்த அலையில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதித்தால், மற்றவர்களுக்கு பரவும் நிலை இருந்ததில்லை.ஆனால், இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், ஒருவருக்கு வந்தால், அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே, பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அந்தளவிற்கு, உருமாறிய கொரோனாவின் வீச்சு அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே, மக்களை, தொற்றில் இருந்து பாதுகாக்க இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.165 படுக்கை வசதிகடந்த ஆண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், குன்னவலம் டி.டி.நாயுடு மருத்துவக் கல்லுாரி, பூந்தமல்லி பனிமலர் மற்றும் திருவேற்காடு ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லுாரிகளில், கொரோனா தொற்று சிகிச்சை மையம் செயல்பட்டது. திருத்தணி ஜி.ஆர்.டி., கல்லுாரி, கவரைப்பேட்டை டி.ஜே.எஸ்., கல்லுாரி உட்பட, பல இடங்களில், தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டது.இரண்டாவது அலை பரவிய இந்த சூழ்நிலையில், பனிமலர் கல்லுாரியில் - 75 படுக்கை மற்றும் ஏ.சி.எஸ்., கல்லுாரியில் - 90 என,165 படுக்கை வசதியுடன், கொரோனாசிகிச்சை மையம் செயல்படுகிறது.இனி வரும் காலங்களில், கொரோனா தொற்று அதிகரித்தால், கூடுதல் சிகிச்சை மையம் திறக்கப்படும் என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.47 ஆயிரம் பேர் பாதிப்புதிருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு அலைகளிலும் சேர்த்து, இதுவரை, மொத்தம், 47 ஆயிரத்து, 303 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.இதில், 45 ஆயிரத்து, 418 பேர் சிகிச்சை நிறைவு பெற்று, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை, 716 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 1,169 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.மக்கள் ஒத்துழைப்புஅவசியம்கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும்அதிகரித்துள்ள சூழ்நிலையில், பொதுமக்கள் யாரும் இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒருவருக்கு உருமாறிய தொற்று பரவினால், அவர் மூலம், அவர் யாரிடம் பழகினாலும், அவர்களுக்கும், தொற்று பரவும். இதை உணர்ந்து, இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு தருவது அவசியம்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X