ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:19

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டு, பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் - தனி, காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும், சட்டசபை தேர்தல், நேற்று முன்தினம், அமைதியாக நடந்து முடிந்துள்ளது.ஆலந்துாரில், 60.85 சதவீதமும், ஸ்ரீபெரும்புதுாரில், 74.03 சதவீதமும், காஞ்சிபுரத்தில், 72.96 சதவீதமும், உத்திரமேரூரில், 80.09 சதவீதமும், ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.மாவட்டம் முழுதும் உள்ள, 1,872 ஓட்டுச்சாவடிகளில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவை, நேற்று அதிகாலை வரை, அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு, வாகனங்களில் எடுத்து வரப்பட்டன.இக்கல்லுாரியில் தனித்தனி அறையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான இயந்திரங்கள், பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துணை ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து இயந்திரங்களும் முறையே வைக்கப்பட்டு, அனைத்து கட்சியினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களான ராகேஷ்குமார் வர்மா மற்றும் கைலாஷ் சந்த்குப்தா, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அறைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு, எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஷிப்ட் முறையில், போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X