கடற்கரை கற்குவியலில் படப்பிடிப்பு ஆபத்தை தடுக்க கண்காணிப்பு அவசியம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
கடற்கரை கற்குவியலில் படப்பிடிப்பு ஆபத்தை தடுக்க கண்காணிப்பு அவசியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:23

மாமல்லபுரம் - மாமல்லபுரம் கடற்கரை கற்குவியலில், ஆபத்து சூழலில் படம் பிடிப்பதை தடுக்க, போலீசார் கண்காணிப்பு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.மாமல்லபுரத்தில், சுற்றுலாப் பயணியர், பாரம்பரிய சிற்பங்களை காண்கின்றனர். சுற்றுலா நினைவாக, சிற்ப பின்னணியில், புகைப்படம், 'செல்பி' படம் என, எடுத்து மகிழ்கின்றனர். இது ஒருபுறமிருக்க, விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பிற்காக, அவ்வப்போது, சிற்பங்கள் பகுதியில், படம் பிடிக்கின்றன. இக்குவியல், கரடு முரடாகவும், ஆபத்தான இடைவெளியுடனும் உள்ளது. கற்களின் மீது ஏறுவோர், கால் இடறினால், விழுந்து காயமடைவர். கடலில் விழும், ஆபத்தும் உள்ளது. சில நாட்களுக்கு முன், கற்குவியல் மீது ஏறிய பெண், பரத நாட்டியம் ஆட, அதை, தொழில்நுட்ப கலைஞர்கள் படம் பிடித்தனர். ஆபத்தான இவ்விடத்தில் படப்பிடிப்பு நடத்த, போலீசார் தடை விதிப்பதோடும், தொடர்ந்த கண்காணிப்பு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X