ஏ.டி.எம்.,-ல் கொள்ளை முயற்சி; பாதுகாப்பு குறைபாடால் திணறல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஏ.டி.எம்.,-ல் கொள்ளை முயற்சி; பாதுகாப்பு குறைபாடால் திணறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:54

அவிநாசி : அவிநாசியில், ஏ.டி.எம்., மையத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.



அவிநாசி - ஈரோடு ரோட்டில், பழங்கரை ரோட்டோரம், ஏ.டி.எம்., ஏஜன்சியினரின் ஏ.டி.எம்., மையம் உள்ளது; நேற்று முன்தினம் இரவு, திருட்டு முயற்சி நடந்தது. நள்ளிரவு, 2:30 மணிக்கு, இரண்டு பேர் டூவீலரில் ஏ.டி.எம்., மையத்துக்குள் நுழைந்து, ஏ.டி.எம்., மையத்தை உடைத்து திருட முயற்சித்தனர்.ஒருவர் 'ெஹல்மெட்' அணிந்தபடியும், இன்னொரு நபர், முகத்தில் கைக்குட்டை கட்டிய படியும், ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.



இதுகுறித்து, அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொதுவாக, ஏ.டி.எம்., மையங்களில் இதுபோன்ற திருட்டு முயற்சி நடக்கும் சமயத்தில் அங்கும் 'அலாரம்' ஒலி எழுப்பும். இதன் மூலம் திருட்டு முயற்சியில் ஈடுபடுவோர், திருட்டு முயற்சியை கைவிட்டு, ஓடிவிடுவர். ஆனால், திருட்டு முயற்சி நடந்த ஏ.டி.எம்., மையத்தில், 'அலாரம்', செக்யூரிட்டியும் இல்லை எனவும், போலீசார் கூறுகின்றனர். எனவே, ஏ.டி.எம்., மையங்களை பராமரிக்கும் விஷயத்தில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X