'ஸ்ட்ராங் ரூம்' உள்ளே, வாக்காளர் 'மனசாட்சி'; ஓட்ட இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2021
07:12
பதிவு செய்த நாள்
ஏப் 08,2021 06:56

திருப்பூர் : ஓட்டுச்சாவடிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்'மில் வைத்து பூட்டி, வேட்பாளர் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 70.11 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மொத்தம், 3,343 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி எடுத்துவரப்பட்டன.இட நெருக்கடி'கன்ட்ரோல் யூனிட்', 'பேலட் யூனிட்', 'விவி பேட்' கருவிகள், ஓட்டுச்சாவடி அலுவலரின் அறிக்கை மற்றும் ஓட்டுப்பதிவு விவரம் அடங்கிய படிவங்களும், 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டன.



இட நெருக்கடி காரணமாக, திருப்பூர் தெற்கு மற்றும் உடுமலை தொகுதிகளில், 'ஸ்டேண்ட்' மூலம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன.கலெக்டர் விஜயகார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், வேட்பாளர் அல்லது ஏஜன்டுகள், 'ஸ்ட்ராங் ரூம்'களை பார்வையிட்டனர். பிறகு, கதவை பூட்டி, 'சீல்' வைத்தனர். அரக்கு சீல் வைத்து, தேர்தல் நடத்தும் அலுவலர், உலோக முத்திரையில் 'சீல்' வைத்தார்.



அரக்கு 'சீல்' பிறகு, அரக்கு சீலில், வேட்பாளர்களும் முத்திரையிட்டனர். காங்கயம் தொகுதி, தி.மு.க.,வினர், கட்சி சின்னம் பொரித்த 'சீல்'கட்டையில், அரக்கு சீல் வைத்தனர். உடுமலை தொகுதியில், பூட்டின் மீது கட்டிய துணியில், வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர். மேலும், சில வேட்பாளர் ஏஜன்டுகள், அரக்கு சீல் மீது, தங்களது மோதிரம் மற்றும் பழமையான காசு எடுத்துவந்து, முத்திரை பதித்தனர்.



தேர்தல் தளவாடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளும், அங்குள்ள மற்றொரு அறையில் வைத்து பூட்டப்பட்டன.மூன்றடுக்கு பாதுகாப்பு இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:ஓட்டுச்சாவடி மையங்கள், மே 2 வரை, போலீஸ் பாதுகாப்பில் இருக்கும். துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார், மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கோபுரம் மூலமாகவும், கல்லுாரி வளாகம் கண்காணிக்கப்படும்.



வளாகத்தில், 160 க்கும் அதிகமான 'சிசிடிவி' கேமரா பொருத்தியும் கண்காணிக்கப்படுகிறது. இரவிலும் பகல் போல் காட்சியளிக்கும் வகையில், கூடுதல் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பாளர் அல்லது அவரது ஏஜென்ட்கள், இரண்டு 'ஷிப்ட்' முறையில், கல்லுாரி வளாகத்தில் தங்கி கண்காணிக்கலாம்.தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், ஒரு வேட்பாளருக்கு, மூன்று ஏஜென்ட்கள் வரை, முன்பதிவு செய்துகொள்ளலாம்.



வேட்பாளர் பரிந்துரை கடிதம் அளித்த, அதற்கான படிவத்தில் போட்டோ ஒட்டி விண்ணப்பிக்கலாம்.வரும் மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும். அதுவரை, ஓட்டு எண்ணிக்கை மையம், போலீஸ் பாதுகாப்பில் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X