2 லட்சத்தை தாண்டிய ஓட்டுப்பதிவு; அவிநாசி தொகுதியில் முதன்முறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:57

அவிநாசி : அவிநாசி சட்டசபை தொகுதி தேர்தல் வரலாற்றில், முதல் முறையாக, ஓட்டுப்பதிவு செய்தோரின் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டியயது.



நடந்து முடிந்த தேர்தலில், அவிநாசி (தனி) தொகுதியில், 75.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மொத்தம், 2 லட்சத்து 80 ஆயிரத்து 551 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஆண்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 232 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 313 பேர்; திருநங்கையர் 6 பேர்.இம்முறை தேர்தலில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 912 பேர் ஓட்டளித்துள்ளனர்; இதில், ஆண்கள், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 237 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 675 பேர்.



ஓட்டுப்பதிவு சதவீதம் சரிவு



கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 77.3 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. அச்சமயத்தில், மொத்தம், 2 லட்சத்து 49 ஆயிரத்து 541 வாக்காளர்கள் இருந்தனர். இதில், ஆண்கள், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 382, பெண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 159 பேர் இருந்தனர்.மொத்தம், ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 936 ஓட்டுகள் பதிவாகின. இவர்களில், ஆண்கள், 97 ஆயிரத்து 774 பேர்; பெண்கள், 95 ஆயிரத்து 162 பேர்.ஆனால், இம்முறை, பதிவான ஆண், பெண்களின் ஓட்டுகள், முறையே, ஒரு லட்சத்தை கடந்துள்ளது.



மொத்தம் பதிவான ஓட்டுகளும், முதன் முறையாக, 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும், கடந்த முறையை காட்டிலும் இம்முறை, 2 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர், இரு பூத்களில் இடம் பெற்றுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் வழங்கிய சிலரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 70 ஆயிரம் பேர் ஓட்டளிக்கவில்லை என்பது போன்ற குறைபாடுகள், ஓட்டு சதவீதத்தை குறைத்திருக்க வாய்ப்புண்டு.எனவே, வரும் நாட்களில் இதுபோன்ற குறைபாடு களையப்படும் பட்சத்தில், ஓட்டு சதவீதம் மேலும், அதிகரிக்கும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X