16.44 லட்சம் வாக்காளர் ஓட்டளித்தனர்; மாவட்ட ஓட்டுப்பதிவு, 69.67 சதவீதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:01

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண்கள்; எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து 255 பெண்கள்; 32 திருநங்கைகள் என, 16 லட்சத்து, 44 ஆயிரத்து, 085 வாக்காளர்கள் (69.67 சதவீதம்) ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.



தாராபுரம் தொகுதியில், இரண்டு லட்சத்து, 58 ஆயிரத்து, 547 வாக்காளர் உள்ளனர்; அவர்களில், 95 ஆயிரத்து, 557 ஆண்கள்; 96 ஆயிரத்து, 182 பெண்கள்; ஒரு திருநங்கை என, ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 740 பேர் (74.16 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர்.



அவிநாசியில், இரண்டு லட்சத்து 80 ஆயிரத்து, 551 வாக்காளர் உள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 05, ஆயிரத்து 249 ஆண்கள்; ஒரு லட்சத்து, 05 ஆயிரத்து, 679 பெண்கள்; ஒரு திருநங்கை என, இரண்டு லட்சத்து, 10 ஆயிரத்து, 929 பேர் (75.18 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர்.



திருப்பூர் வடக்கு தொகுதியில், மூன்று லட்சத்து, 79 ஆயிரத்து, 113 வாக்காளர் உள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 408 ஆண்கள்; ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 309 பெண்கள்; திருநங்கைகள், 14 என, இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 731 பேர் (62.44 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர்.



திருப்பூர் தெற்கு தொகுதியில், இரண்டு லட்சத்து, 76 ஆயிரத்து, 473 வாக்காளர் உள்ளனர்; அவர்களில், 89 ஆயிரத்து, 110 ஆண்கள்; 84 ஆயிரத்து 257 பெண்கள்; மூன்று திருநங்கை என, என, ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 370 பேர் (62.70 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர்.



அதிகபட்ச வாக்காளர்



பல்லடம் தொகுதியில், அதிகபட்சமாக, இரண்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 977 வாக்காளர் ஓட்டளித்துள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் தெற்கு தொகுதியில், ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 370 பேர் ஓட்டளித்துள்ளனர். கடந்த, 2016 தேர்தலில், மடத்துக்குளத்தில் குறைந்தபட்ச வாக்காளர் ஓட்டளித்திருந்தனர்.



காங்கயம் 'டாப்'



கடந்த சில தேர்தல்களை போலவே, இம்முறையும், காங்கயம் தொகுதியில், அதிகபட்ச ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது. அதாவது,77.29 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக, திருப்பூர் வடக்கில், 62.44 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.



ஆண்கள் சதவீதம் அதிகம்



மாவட்ட அளவில், மொத்தம் உள்ள ஆண் வாக்காளில், 70.88 சதவீதம் பேர் ஒட்டளித்துள்ளனர்.பெண் வாக்காளரில், 68.49 சதவீதம் பேரும், 11.30 சதவீத திருநங்கை வாக்காளரும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.மாவட்டத்தில், மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 619 ஆண்கள்; மூன்று லட்சத்து, 75 ஆயிரத்து, 849 பெண்கள்; 251 திருநங்கைகள் என, மொத்தம், ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து, 468 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்யவில்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X