தாராபுரம் தொகுதியில் சதவீதம் குறைவு; ஓட்டு அதிகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:06

திருப்பூர் : தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலை விட, 10 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பதிவாகியுள்ளது.



தாராபுரம் (தனி) தொகுதியில், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 57 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 480 பெண் வாக்காளர்கள், 10 திருநங்கையர் என, 2 லட்சத்து, 58 ஆயிரத்து, 547 வாக்காளர்கள் உள்ளனர்.இத்தொகுதியில், பா.ஜ., - தி.மு.க., - அ.ம.மு.க., உட்பட, 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 95 ஆயிரத்து, 774 ஆண்கள், 95 ஆயிரத்து, 934 பெண்கள், ஒரு திருநங்கை என, ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 709 பேர் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. மொத்தம், 74.15 சதவீதம். 66 ஆயிரத்து, 838 வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லை.



இத்தொகுதியில், கடந்த, 2016 தேர்தலில், 2 லட்சத்து, 38 ஆயிரத்து, 70 வாக்காளர்களில், ஒரு லட்சத்து, 81 ஆயிரத்து, 383 பேர் ஓட்டு பதிவு செய்தனர். மொத்தம், 76.83 சதவீதம் ஓட்டு பதிவானது. கடந்த தேர்தலில், ஓட்டு பதிவான சதவீதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, 2.68 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கடந்த தேர்தலை விட தற்போது, 10 ஆயிரத்து, 326 ஓட்டுக்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X