ஓட்டுப்பதிவு சரிவுக்கு அடுக்கடுக்கான காரணம்! வெற்றியை தடுக்குமா என அ.தி.மு.க., - தி.மு.க., கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:09

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு மூன்று சதவீதம் சரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில், இது தேர்தலில் யாருக்கு சாதகம் என்ற பதைபதைப்பை, அரசியல் கட்சியினரிடம் ஏற்படுத்தியுள்ளது.



சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், 69.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. எட்டு தொகுதிகளிலுமே ஓட்டுப்பதிவு சரிந்திருந்தாலும், திருப்பூர் மாநகர பகுதிகளை உள்ளடக்கிய பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகள், மூன்று முதல் நான்கு சதவீதம் வரை, ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.



கிராமங்களில் ஆர்வம்




காங்கயம் தொகுதி, கடந்த முறை தேர்தலின்போது, மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் முதலிடம் பெற்றது. இந்த முறையும், 77.29 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றாலும், ஓட்டுப்பதிவு சதவீதம் ஒரு சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக சரிந்திருக்கிறது. கிராமப்புறங்களை உள்ளடக்கிய அவிநாசி, தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளில், ஓட்டு சதவீதம் 70ஐ தாண்டியிருக்கிறது.



என்ன காரணம்!





அரசியல் கட்சியினர், பூத் சிலிப் முறையாக வழங்கப்படாததை காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த தேர்தலில் பூத் சிலிப், வாக்காளர் போட்டோவுடன் வழங்கப்பட்டது. இந்த முறை, போட்டோ இடம் பெறவில்லை.இதற்கு முன், கட்சியினரே, தங்கள் சின்னத்துடன் அச்சிட்டு, 'பூத் சிலிப்'களை வீடு, வீடாக சென்று வழங்குவர். அரசியல் கட்சியினரின் தயவை வாக்காளர் நாடக்கூடாது என்ற எண்ணத்தில்தான், தேர்தல் கமிஷனே 'பூத் சிலிப்' வழங்குகிறது.



திருப்பூர் மாவட்டத்தில், 'பூத் சிலிப்' வழங்கப்படாததை மட்டுமே, ஒட்டுப்பதிவுக்கு காரணமாக கூற முடியாது. ஏனெனில், 'பூத்'களிலேயே கூட வாக்காளர்கள், 'பூத் சிலிப்'களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.கொரோனா அச்சுறுத்தல்ஓட்டுப்பதிவுக்கு இரு வாரம் முன்பிருந்தே, திருப்பூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.



எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அனைவரும் முழுமையாக, பயன்படுத்தி கொள்ளவில்லை.முதியோர், இணை நோய் உள்ளவர்களிடம் ஏற்பட்ட தயக்கம், ஓட்டுப்பதிவு சதவீதத்தில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கலாம். அதேநேரம், நுாறு வயது மூதாட்டி உட்பட முதியவர்கள் பலர், தங்கள் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றியதை, காண முடிந்தது.



இரட்டை ஓட்டுரிமை





திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில், வெளி மாவட்ட தொழிலாளர் பலர் வசிக்கின்றனர். இவர்களில் பலர், தங்கள் தொகுதியிலும், இங்கும் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்களை, அதிகாரிகள் மற்றும் கட்சியினரால் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஓட்டுப்பதிவு சதவீதத்தில் சரிவை ஏற்படுத்தியதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர், அரசியல் கட்சியினர்.



விழிப்புணர்வு





'கொரோனா பரவல் உள்ள நேரத்தில், இத்தகைய ஓட்டுப்பதிவு சதவீதத்தை எட்டியதை குறை கூற முடியாது; மேலும் தமிழகம் முழுதுமே, ஒட்டுமொத்தமாக, ஒட்டுப்பதிவு சதவீதம் குறைந்திருப்பதையும் உற்றுநோக்க வேண்டும்; சென்னை போன்ற நகரங்களை போன்று வெளிமாவட்டத்தினர் அதிகம் வசிக்கும் திருப்பூர் மட்டும் விதிவிலக்காக இருப்பது சிரமம்தான்' என்கிறார், ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.



யாருக்கு சாதகம்!





ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ள நிலையில், இது வெற்றி வாய்ப்பில் யாருக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்று, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரிடம் விவாதம் எழுந்துள்ளது. இது தங்களுக்கான வெற்றிவாய்ப்பை பாதித்து விடக்கூடாது என்ற பதைபதைப்பையும், அவர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X