அமைதியாக நடந்தது ஓட்டுப் பதிவு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அமைதியாக நடந்தது ஓட்டுப் பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:10

திருப்பூர் : திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓட்டுப் பதிவு அமைதியான முறையில், எந்த அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்தது. இதனால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் பெருத்த நிம்மதி அடைந்தனர்.



தெற்கு தொகுதிக்கான ஓட்டுப் பதிவுக்கு, 401 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 168 ஓட்டுச் சாவடி பதட்டமானவையாக கண்டறியப்பட்டிருந்தது. இவற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கூடுதலாக துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொகுதியில் உள்ள, 201 ஓட்டுச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.



மொத்தம் 20 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு மாலை 7:00 மணிக்கு நிறைவடைந்தது. நொய்யல் பள்ளி ஓட்டுச் சாவடியில் மாலை 6:30 மணிக்கு கட்சியினர் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. இது தவிர வேறு எங்கும் எந்த பிரச்னையும் இன்றி, ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது.எந்த அசம்பாவிதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இதனால், போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பெருத்த நிம்மதியடைந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X