ஏஜன்ட் நியமிக்காத தே.மு.தி.க., | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஏஜன்ட் நியமிக்காத தே.மு.தி.க.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:11

அனுப்பர்பாளையம் : வடக்கு தொகுதி ஓட்டுச்சாவடியில், தே.மு.தி.க., சார்பில் ஏஜன்ட் நியமிக்கப்படாததால், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர் வடக்கு தொகுதியில் தே.மு.தி.க., சார்பில், கட்சியின் பகுதி செயலாளர் செல்வகுமார், போட்டியிட்டார்.வேட்பாளர், 'தனி ஒருவனாக' பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த இரண்டு நாட்கள் முன்பு, கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இது தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நேற்று நடந்த ஓட்டுப்பதிவின்போது, பல ஓட்டுச்சாவடிகளில் தே.மு.தி.க.,வினர் தங்கள் கட்சி சார்பில், ஏஜன்ட்களை நியமிக்கவில்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X