தேயிலை ஏல மையத்தில் 2.87 லட்சம் கிலோ விற்பனை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தேயிலை ஏல மையத்தில் 2.87 லட்சம் கிலோ விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:22

பெ.நா.பாளையம் : கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, கோவை தேயிலை ஏல மையத்தில் வாரந்தோறும் இணையதளம் வாயிலாக, தேயிலை ஏலம் நடக்கும். இதில், சர்வதேச அளவில் உள்ள தேயிலை ஏல தாரர்கள் கலந்து கொள்வர்.



இந்த வாரம் நடந்த தேயிலை தூள் ஏலத்துக்கு, 2 லட்சத்து, 7 ஆயிரத்து, 219 கிலோ வந்தது. இதில், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 66 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இவ்வார சராசரி ஏல மதிப்பு கிலோவுக்கு, 133 ரூபாய், 49 காசுகளாக இருந்தது.இலைரக தேயிலை ஏலத்துக்கு இரண்டு லட்சத்து, 11 ஆயிரத்து, 899 கிலோ விற்பனைக்கு வந்தது. இதில், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 909 கிலோ விற்பனையானது.இலைரக தேயிலையின் இவ்வார சராசரி ஏல மதிப்பு கிலோவுக்கு, 118 ரூபாய், 21 காசுகளாக இருந்தது. இத்தகவலை, கோவை தேயிலை ஏல மைய செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X