எங்கே போனார்கள் 9.76 லட்சம் வாக்காளர்கள்? பட்டியல் தவறா அல்லது ஓட்டுப்போடலையா? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
எங்கே போனார்கள் 9.76 லட்சம் வாக்காளர்கள்? பட்டியல் தவறா அல்லது ஓட்டுப்போடலையா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:27

கோவை : நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில், 9 லட்சத்து, 76 ஆயிரத்து, 355 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. இவர்கள் ஓட்டளிக்க விரும்பாமல், ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லையா அல்லது, வாக்காளர் பட்டியல் தப்பும் தவறுமாக இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.



2016 தேர்தலில், 28 லட்சத்து, 33 ஆயிரத்து, 882 வாக்காளர்கள் இருந்தனர். அதில், 19 லட்சத்து, 46 ஆயிரத்து, 676 பேர் ஓட்டளித்தனர்; 8 லட்சத்து, 87 ஆயிரத்து, 206 பேர் ஓட்டளிக்கவில்லை.நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பயன்படுத்திய பட்டியலில், 30 லட்சத்து, 82 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் இருக்கின்றனர். 21 லட்சத்து, 5 ஆயிரத்து, 673 பேர் ஓட்டளித்துள்ளனர்; 9 லட்சத்து, 76 ஆயிரத்து, 355 பேர் ஓட்டளிக்கவில்லை.



ஒவ்வொரு தேர்தலிலும், பல லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை என்ற கணக்கீடு வருகிறது. இவர்கள் நிஜமாகவே ஓட்டளிக்க விரும்பாமல், சாவடி பக்கம் வரவில்லையா அல்லது பட்டியல் தப்பும் தவறுமாக இருக்கிறதா என்கிற கேள்வி தொடர்கிறது. இதற்கு விடை காண, நுாறு சதவீதம் தவறில்லாத பட்டியல் தயாரிக்க வேண்டிய கடமை, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது: தற்போதைய ஓட்டுப்பதிவு கணக்குப்படி, நம் மாவட்டத்தில், 9.76 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என நினைக்கிறோம். இதன்படி, 10 தொகுதிக்கு பிரித்து பார்த்தால், சராசரியாக தொகுதிக்கு, 97 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லையா என கேட்கத் தோன்றும். அவ்வளவு வாக்காளர்கள் ஓட்டுப்போடாமல் இருக்க வாய்ப்பில்லை.



பட்டியலில் இரட்டை பதிவுகள் ஏராளமாக இருக்கின்றன; இறந்தவர்கள் பெயர் நீக்கம் செய்யாமல் இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, வேலையிழந்தவர்கள், தொழிலை இழந்தவர்கள் பலரும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், நுாறு சதவீதம் தவறில்லாத பட்டியல் தயாரிக்க வேண்டும்.அதற்கு, ஒவ்வொரு தொகுதியிலும் தற்போது ஓட்டுப்போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும்.



பின், வீதி வீதியாகச் சென்று, அவர்கள் இருக்கிறார்களா; இடம் பெயர்ந்து விட்டார்களா என ஆய்வுக்கு உட்படுத்தி, சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லையெனில், பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, பட்டியல் உண்மையானதாக இருக்கும்.அதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர், நோயாளியுடன் வசிப்பவர்கள் மற்றும் காப்பகங்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் ஓட்டுப்போட முடியாத, சூழல் இருக்கிறது. அவர்கள் ஓட்டளிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.



தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு, தபால் ஓட்டு போட வாய்ப்பளிக்கப்படுகிறது. இவர்கள் கண்டிப்பாக தபால் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய நடைமுறையை பின்பற்றினால் மட்டுமே, ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பட்டியலில் இரட்டை பதிவுகள் ஏராளமாக இருக்கின்றன; இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் இருக்கிறது.



கொரோனா பரவல் காரணமாக, வேலையிழந்தவர்கள், தொழிலை இழந்தவர்கள் பலரும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், நுாறு சதவீதம் தவறில்லாத பட்டியல் தயாரிக்க வேண்டும்.ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுப்போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். வீதி வீதியாகச் சென்று, அவர்கள் இருக்கிறார்களா; இடம் பெயர்ந்து விட்டார்களா என கண்டறிந்து, சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லையெனில், பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X