மருத்துவ மாணவர்கள் மீண்டும் போராட்டம்; உடனே தீர்வு காண்பதாக டீன் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:29

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் முறையான வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி, முதுகலை மருத்துவ மாணவர்கள், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 150 முதுநிலை மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.



இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படாததால், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ மாணவர்கள் கூறுகையில், 'நர்ஸ்கள் செய்ய வேண்டிய ஊசி போடுதல், ரத்த மாதிரிகளை சேகரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், எங்களை செய்ய சொல்கின்றனர்.



கொரோனா பணியில் ஈடுபடுவோருக்கு தகுந்த உணவு, தனிமைப்படுத்திக் கொள்ள அறைகள் கூட இங்கு இல்லை.குறிப்பாக, பல்வேறு முக்கிய நோய்களுக்கு, மருந்து இல்லை என்கின்றனர். எங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.



அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மாணவர்களின் கோரிக்கை குறித்து, மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளோம். ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், அனைத்து பணிகளும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ள, அறை ஒதுக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்குள் சம்பளம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X