சட்டசபை தேர்தல் முடிவு யாருக்கு சாதகம்? ஓட்டுச்சாவடி நிலவரம் அலசும் ஏஜன்ட்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:34

கோவை : கோவையில் நடந்த சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, யாருக்கு சாதகம் என்பதை, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்ட்கள் கணக்குப் போட்டு வருகின்றனர்.



கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் - 15,19,027; பெண் - 15,62,573, மூன்றாம் பாலினத்தவர் - 428 என, மொத்தம், 30 லட்சத்து, 82 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 10 லட்சத்து, 49 ஆயிரத்து, 917 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து, 55 ஆயிரத்து, 653 பெண் வாக்காளர்கள், 103 மூன்றாம் பாலினத்தவர் என, 21 லட்சத்து, 5 ஆயிரத்து, 673 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர்.



ஓட்டுப்பதிவை கண்காணிக்க, அந்தந்த வேட்பாளர்கள் சார்பில், ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஓட்டளிக்க வந்தவர்களின் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியல் வரிசை எண்ணை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் சொன்னதும், தாங்கள் தயாராக வைத்திருந்த பட்டியலில் சரிபார்த்து, வட்டமிட்டுக் கொண்டனர்.



ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், ஓட்டு எண்ணிக்கை மையமான ஜி.சி.டி.,யில், பாதுகாப்பாக வைத்து சீலிடப்பட்டன.மே 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதற்கு வெகுநாட்கள் இருப்பதால், பூத் ஏஜன்ட்டுகளாக பணிபுரிந்தவர்கள், தங்களது பட்டியலில் வட்டமிட்டு வைத்திருக்கும் வேட்பாளர்கள் பெயர்களை வைத்து, கூட்டி கழித்துப் பார்க்கின்றனர்.



வீதியில், எத்தனை ஓட்டு பதிவாகியிருக்கிறது; அவர் நம்ம ஆளு; நம்ம கட்சிக்குதான் ஓட்டளித்திருப்பார். கடைசி வீட்டுக்காரர், எப்போதும் அரசை எதிர்த்தே பேசுவார்; அவரது குடும்பம் ஓட்டளித்திருக்க வாய்ப்பில்லை என்பது உட்பட பல்வேறு அம்சங்களையும் அலசுகின்றனர்.



பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வாக்காளர்கள் யார், யார், அதில் முதல்முறை ஓட்டளிப்பவர்கள் யார் யார், அரசியல் கட்சிகள் சாராதவர்கள் என தனித்தனியாக பிரித்து, யாருக்கு வெற்றி வாய்ப்பு என, கூட்டல் கழித்தல் கணக்குகளை, கட்சி அலுவலகத்தில் அமர்ந்து, ஆய்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.



ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் நாட்கள் இருந்தாலும், வெற்றி தோல்வி எப்படி இருக்கும் என்பதை, பூத் ஏஜன்ட்கள் இப்போதே ஓரளவு கணித்து விடுவர். அதனால், பூத் நிலவரங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X