மளிகைக்கடைகளில் கூட்டம் 'அள்ளுகிறது': முழு ஊரடங்கு புரளியை நம்பி மக்கள் 'பரபர'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:40

கோவை : முழு ஊரடங்கு வரும் என்ற, சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவலை நம்பி, பொதுமக்கள் மளிகைப்பொருட்களை அதிகமாக வாங்கி, இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, இப்போக்கு அதிகரித்துள்ளது.



கடந்த ஆண்டு தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்த போது, திடீரென முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க, மளிகை கடைகளில், மக்கள் கூட்டம் அலைமேதியது.இப்போது தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.



அதனால் பொதுமக்கள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைக்க துவங்கி உள்ளனர். இதனால் மொத்தப்பொருட்கள் விற்பனை மையமான, ரங்கேகவுடர் வீதியில், கூட்டம் அதிகரித்து வருகிறது.



இதுகுறித்து, மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:இரண்டு நாட்களாக மளிகை பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சில்லரை வியாபாரிகளும், பொருட்களை அதிகமாக வாங்கி, 'ஸ்டாக்' வைக்க துவங்கி உள்ளனர். கடந்த முறை உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது போல், இந்த முறை ஏற்படாது. மக்கள் பீதியடையத் தேவையில்லை.



மொத்த வியாபாரிகளும் போதுமான அளவு, பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வைத்துள்ளனர். மீண்டும் ஊரடங்கு போடுவதை விட, சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி, சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை, பொதுமக்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம். சினிமா தியேட்டர்களை மூடலாம். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்க, அரசு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.



மீண்டும் ஊரடங்கு போடுவதை விட, சுகாதார பணிகளை தீவிரப்படுதி, சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை, பொதுமக்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம். சினிமா தியேட்டர்களை மூடலாம். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம்.



கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பில்லை என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கோவையை பொறுத்தவரை, நாங்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில்தான், தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இதுவரை, எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. அதனால் மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202111:36:58 IST Report Abuse
ஆப்பு அதெல்லாம் இல்லை. மளிகைக் கடைகளில் டோக்கனுக்கு பொருள் பட்டுவாடா நடக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X