ஓட்டுப்பதிவு முடிஞ்சாச்சு; துணை ராணுவம் 'குட்பை' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஓட்டுப்பதிவு முடிஞ்சாச்சு; துணை ராணுவம் 'குட்பை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:40

கோவை : தமிழக சட்டசபை தேர்தல், பாதுகாப்பு பணியில் ஈடுபட, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, துணை ராணுவத்தினர் கோவை வந்தனர்.



தேர்தல் பாதுகாப்பு பணிகளிலும், கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி.,க்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் வளையத்தில் ஆயுதம் ஏந்திய, துணை ராணுவத்தினர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.



இதற்காக சுழற்சி முறையில், துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்பட உள்ளனர். இவர்களை தவிர்த்து, மற்ற துணை ராணுவத்தினர், நேற்று ரயில் மூலம் கிளம்பி சென்றனர்.வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்ததும், கோவையில் தங்கியுள்ள மீதமுள்ள துணை ராணுவத்தினர் புறப்பட்டு செல்ல உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X