ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் கவுன்டர் திறக்கலாமே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:42

ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், மூன்று டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் செயல்பட்டன. கடந்த சில மாதத்துக்கு முன், இரண்டு கவுன்டராக குறைக்கப்பட்டது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து, முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இரண்டு முன்பதிவு கவுன்டர்களில், ஒரு கவுன்டரில் மட்டும் பணம் கொடுத்து டிக்கெட் பதிவு செய்யலாம் என்றும், மற்றொரு கவுன்டரில் ஏ.டி.எம்., கார்டு உள்ளவர்கள் மட்டுமே, முன்பதிவு செய்ய முடியும் என, அறிவிப்பு வெளியிட்டனர். ஏற்கனவே, பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நிலையில், தற்போது ஒரு கவுன்டரில் மட்டுமே இனி பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் பயணிகள் காத்து கிடக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் கவுன்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X