அதிகாலை 5:00 மணி வரை தேர்தல் பணி: பாதுகாப்புடன் ஓட்டு பெட்டிகள் வைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:42

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதியிலும், 76.91 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அனைத்து இயந்திரங்களையும் முறையாக நிறுத்தம் செய்து, ஒவ்வொரு இயந்திரமும் சீல் வைத்து, அவற்றை முழுமையாக வீடியோ பதிவு செய்து, ஒப்புதல் சீட்டில் ஒப்புதல் பெற்றனர். மண்டலம் வாரியாக லாரி, வேன்களில் ஓட்டுப்பெட்டியை எடுத்து செல்ல, துப்பாக்கி ஏந்திய போலீசார், மண்டல அளவிலான அதிகாரிகள் அடங்கிய கார்கள் வந்தன. இரவு, 9:00 மணி முதல் லாரிகளில் ஏற்றி, மண்டல அளவிலான பெட்டிகளை சேகரித்தனர். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய தொகுதி பெட்டிகள், ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி., பொறியியல் கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதி பெட்டிகள், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறையில், ஓட்டுச்சாவடி பெட்டிகள் இறக்கி, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அடுக்கி வைத்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் விபரம், சேகரிக்கப்பட்ட ஆவணம் மற்றும் தகவல்கள் போன்றவற்றை, அந்தந்த பெட்டிகள் மீது வைத்து, தற்காலிகமாக சீல் வைத்தனர். மொத்தம், 2,741 ஓட்டுச்சாவடிகளின் பெட்டிகளும் சரி பார்த்து வைத்ததால், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை பணி நீடித்தது. காலை, 10:30 மணிக்கு கலெக்டர் கதிரவன், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அனைத்து அறைகளும் திறக்கப்பட்டு, பெட்டிகள் சரி பார்க்கப்பட்டு, மீண்டும் இரு பூட்டுகளுடன் சீல் வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு அறையை நோக்கியும், அறையை சுற்றிலும் சுழலும் மற்றும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அந்தந்த பகுதியில் வேட்பாளர்களின் முகவர்கள், போலீசார் அமர்வதற்கும், ஓய்வெடுப்பதற்குமான வசதி, ஷாமியானா வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். நேற்று காலை, 5:00 மணி முதல், அங்கு வந்து செல்வோர் விபரம் முழுமையாக பதிவு செய்ய துவங்கினர். இதே கல்லூரி வளாகத்தில் மே, 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளதால், அதற்கான கம்பி வலைகள் அடித்து, ஓட்டு எண்ணும் பகுதி, முகவர்கள் அமரும் பகுதி, அதிகாரிகள் மற்றும் ஓட்டுப்பெட்டி வந்து செல்லும் பகுதி என, அனைத்தும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X