திருப்பூர் பைக் மெக்கானிக் வாய்க்காலில் மூழ்கி பலி | ஈரோடு செய்திகள் | Dinamalar
திருப்பூர் பைக் மெக்கானிக் வாய்க்காலில் மூழ்கி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:45

கோபி: திருப்பூரை சேர்ந்த பைக் மெக்கானிக், கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பலியானார்.


திருப்பூர் மாவட்டம், ஈட்டி வீராம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 42. பைக் மெக்கானிக்; இவர் ஓட்டளிக்க போவதாக வீட்டில் கூறிவிட்டு, தன் மைத்துனர் தர்மராஜ் மற்றும் நண்பர்களுடன், கோபி, கொளப்பலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு குளித்து கொண்டிருந்தார். ஆனால், நீச்சல் தெரியாமல், ரவி மட்டும் தண்ணீரில் மூழ்கினார். தண்ணீரில் மூழ்கிய ரவியை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெள்ளாங்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ரவியின் உடல் நேற்று காலை, 11:00 மணிக்கு மிதந்தது. சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரவி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரவியின் மனைவி கவிதா, 39, கொடுத்த புகார்படி, சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X