பள்ளி கட்டடம் மீது விழுந்த மரக்கிளை; ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:45

சென்னிமலை: சென்னிமலை அருகே, ஓட்டுப்பதிவு நடந்த அரசு பள்ளி கட்டடம் மீது, 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரக்கிளை முறிந்து விழுந்ததில், சைக்கிள் ஸ்டாண்ட் சேதமடைந்தது. பள்ளியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பத்திரமாக மீட்கப்பட்டன


சென்னிமலை அடுத்துள்ள, பசுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகில் மற்றொரு பள்ளி கட்டடத்திலும், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதில், 2,501 வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஓட்டுப்பதிவு நடந்த அன்று இரவு, 12:30 மணியளவில், தேர்தல் அலுவலர்கள் பசுவபட்டி ஊர் மக்களோடு சேர்ந்து, பள்ளிக்கு வெளியே நின்றிருந்தனர். அப்போது பலமான காற்று வீசியதால், பள்ளி அருகே இருந்த, 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தின் மரக்கிளை ஒன்று முறிந்து, விழும் நிலையில் இருந்தது. இதை பார்த்த தேர்தல் அலுவலர்களும், பொதுமக்களும் உடனடியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பள்ளியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில், இரண்டு மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதில் ஒரு மரக்கிளை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்த பள்ளி கட்டடம் மீது விழுந்தது. மேலும், மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் ஸ்டாண்ட் சேதமடைந்தது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X