கண்காணிப்பு வளையத்தில் ஓட்டு எண்ணும் மையங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:47

சேலம்: மாவட்டத்தில் உள்ள, ஓட்டு எண்ணும் மையங்கள் நான்கும், துப்பாக்கி சகிதமாக போலீசார், 24 மணி நேர கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.


சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 11 தொகுதிகளுக்கு, சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், பதிவான ஓட்டுகள், நான்கு மையங்களில் எண்ணப்பட உள்ளன. அதன்படி, ஓமலூர், மேட்டூர், சேலம் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளில், பதிவான ஓட்டுகள் அடங்கிய, 2,965 இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான, கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய, 2,256 இயந்திரங்கள், அம்மாபேட்டை கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய, 838 இயந்திரங்கள், தலைவாசல் அடுத்த, மணிவிழுந்தானில் உள்ள, மாருதி கல்வி நிறுவன மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இடைப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய, 1,092 இயந்திரங்கள், சங்ககிரி, விவேகானந்தா கல்வி நிறுவன மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில், இடைப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள், வைக்கப்பட்ட பின், நேற்று, சீல் வைக்கப்பட்டன. தேர்தல் பொது பார்வையாளர் சின்மயி புன்லிக்ராவ் கோட்மரே முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தலைமையில், 'சீல்' வைக்கும் பணி நடந்தது.


பின், ராமன் கூறியதாவது: பதிவான ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள், தனித்தனியே, சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தின், பாதுகாப்பு, இரும்பு அறைகளில் வைக்கப்பட்டு, பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள், அவரின் முகவர்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டன. ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அதை, வேட்பாளர், முகவர்கள், ஆய்வு செய்ய, அந்தந்த ஓட்டும் எண்ணும் மையத்தில், தனித்தனியே, கண்காணிப்பு அறைகள் அமைத்து, எல்.இ.டி., 'டிவி'கள் பொருத்தப்பட்டு, பார்வையிட தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிக்க, 24 மணி நேர அனுமதி உண்டு. நான்கு மையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில், போலீசார், 132 பேர், மத்திய பாதுகாப்பு படையினர், 76 பேர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், 293 பேர், மாவட்ட, மாநகர போலீசார் என, 501 பேர், சுழற்சி முறையில், 24 மணி நேரமும், துப்பாக்கி சகிதமாக, ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X