இடைப்பாடி தொகுதியில் தொடர்ந்து 3ம் முறை 85 சதவீதம் ஓட்டுப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:47

இடைப்பாடி: இடைப்பாடி தொகுதியில், தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தல்களில், 85 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.


இடைப்பாடி தொகுதியில், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 81 ஆண்கள், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 101 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 23 பேர் என, இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து, 205 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு, நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 957 ஆண்கள், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 285 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 16 பேர் என, இரண்டு லட்சத்து, 44 ஆயிரத்து, 258 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 85.64 சதவீதம். கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, இரண்டு லட்சத்து, 61 ஆயிரத்து, 137 வாக்காளர் இருந்தனர். அதில், இரண்டு லட்சத்து, 23 ஆயிரத்து, 981 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 85.77 சதவீதம். இதற்கு முன், 2011ல் நடந்த தேர்தலில், 2 லட்சத்து, 16 ஆயிரத்து, 907 வாக்காளர் இருந்தனர். அதில், ஒரு லட்சத்து, 85 ஆயிரத்து, 267 ஓட்டுக்கள் பதிவாகின. இது, 85.41 சதவீத ஓட்டுகள். இதன்மூலம், மூன்று சட்டசபை தேர்தல்களிலும், இடைப்பாடி தொகுதியில், 85 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது.


மேட்டூரில் சரிவு: மேட்டூர் தொகுதியில், 2016ல் நடந்த தேர்தலின்போது, இரண்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 790 வாக்காளர் இருந்தனர். இவர்களில், இரண்டு லட்சத்து, 5,032 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 78.22 சதவீதம். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், மேட்டூர் தொகுதி, மொத்த வாக்காளர், இரண்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 620 பேர். அதில், இரண்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 831 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 76 சதவீதம். இது, மேட்டூர் தொகுதியில் கடந்த ஆண்டை விட, 2.22 சதவீதம் குறைவு.


ஓமலூர்: ஓமலூர் தொகுதியில், 2016ல், மொத்த வாக்காளர், இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 584 பேர். அதில், இரண்டு லட்சத்து, 27 ஆயிரத்து, 205 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 84.65 சதவீதம். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், ஓமலூர் தொகுதி மொத்த வாக்காளர், இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து, 894 பேர். அதில், இரண்டு லட்சத்து, 46 ஆயிரத்து, 424 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 83.28 சதவீதம். இது, 2016 தேர்தலை விட, ஒரு சதவீதம் குறைவு.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X