வாகனங்களில் பொருத்திய ஜி.பி.எஸ்., கருவி அகற்றம் | சேலம் செய்திகள் | Dinamalar
வாகனங்களில் பொருத்திய ஜி.பி.எஸ்., கருவி அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:48

சேலம்: கண்காணிப்பு குழுவினர் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்., கருவிகள் அகற்றப்பட்டன. சட்டசபை தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, வாகனங்கள் வழங்கப்பட்டு, முறையாக செயல்படுகின்றனரா என்பதை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது. இதனால், எந்த நேரத்தில், எங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறிய முடிந்தது. ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்ததால், அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்., கருவிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, வாகனங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X