எம்.எல்.ஏ.,வுக்கு ரவுடி கொலை மிரட்டல்; வீடியோ 'வைரல்' கண்டுகொள்ளாத போலீசார் | சேலம் செய்திகள் | Dinamalar
எம்.எல்.ஏ.,வுக்கு ரவுடி கொலை மிரட்டல்; வீடியோ 'வைரல்' கண்டுகொள்ளாத போலீசார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:48

சேலம்: தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு, ரவுடி கொலை மிரட்டல் விடுத்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சேலம் வடக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தற்போது அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த, 5 மாலை, கன்னங்குறிச்சியை சேர்ந்த ரவுடி ஜெகதீஷ்வரன், 29, தலைமையில் அ.தி.மு.க.,வினர், பரிசு பொருளுக்கு, கன்னங்குறிச்சியில், 'டோக்கன்' வழங்கினர். இதுகுறித்து, தி.மு.க.,வினர் கேட்க, இரு தரப்பு இடையே மோதலாக மாறியது. கன்னங்குறிச்சி போலீசார், கலைந்து போக செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதியவில்லை. இந்நிலையில், ரவுடி ஜெகதீஷ்வரன், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் பரவி வருகிறது. அதில், 'நான் குண்டாசில் கைதாகும் நிலை ஏற்பட்டபோது, அ.தி.மு.க.,வினர் தான், போலீசில் பேசி காப்பாற்றினர். இதனால், என் மகனை தொட்டு தூக்கி பிடிக்க உதவியது. இதற்காக, தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறேன். என்னை, 10 நாளுக்கு பின், எங்கே போவாய் என கேட்கின்றனர். 5 ஆண்டு ஆனாலும் இங்கே தான் இருப்பேன். இப்பகுதியில், தி.மு.க.,வினர் யாரையும் விட முடியாது. இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்' என பேசுகிறார். எதிர்முனையில் பேசியவர், 'அப்படியானால், யாரை போடப்போகிறாய்' என கேட்கிறார். இப்படி, அந்த ஆடியோ முடிகிறது. அதேபோல், மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகளும், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 'எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது' என, நிருபர்களிடம் கூறினார். ரவுடி வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தும், போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X