3 மாதமாகியும் மின்இணைப்பு இல்லை; இருளில் மூழ்கிய இரட்டை மேம்பாலம் | சேலம் செய்திகள் | Dinamalar
3 மாதமாகியும் மின்இணைப்பு இல்லை; இருளில் மூழ்கிய இரட்டை மேம்பாலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:52

வீரபாண்டி: மூன்று மாதமாகியும் மின்இணைப்பு பெற நடவடிக்கை இல்லாததால், இரட்டை மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளது.


சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில், விபத்தை தடுக்க, 45 கோடி ரூபாய் மதிப்பில், இரட்டை மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த ஜன., 8ல், மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. பாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைத்து, நவீன எல்.இ.டி., விளக்குகள், 100க்கும் மேற்பட்டவை பொருத்தி ஒன்றுக்கொன்று இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பால திறப்பு விழா முடிந்து, மூன்று மாதமாகியும், இதுவரை விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், இரவில் மேம்பாலம், அரியானூர் சந்திப்பு பகுதிகள், இருளில் மூழ்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை, மின்இணைப்பு பெற, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X