காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:54

தர்மபுரி: தர்மபுரி, கசியம்பட்டி விவசாயிகளுக்கு, திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவியர், காளான் வளர்ப்பு குறித்து, விளக்கம் அளித்தனர். திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய மாணவியர், தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு வந்துள்ளனர். இவர்கள், தங்களின் வேளாண் பணி அனுபவ திட்டத்தில் இங்கு தங்கி, விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில், அபிநயா, ஷர்மிளா, நந்தினி உள்ளிட்ட மாணவியர், தர்மபுரி அடுத்த கசியம்பட்டியில் முகாமிட்டு, சிப்பி காளான் வளர்ப்பு, பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தனர். மேலும், காளான் வளர்ப்புக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல், படுக்கைகள் அமைத்தல், அறுவடை செய்யும் முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X