குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:55

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில், மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட டேக்கீஸ்பேட்டையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து, பழைய திருப்பத்தூர் செல்லும் சாலை நடுவே, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உள்ளது. இதில், இங்குள்ள தனியார் பால் டிப்போ அருகே, இரண்டு இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் பாய்ந்து, சாக்கடையில் கலக்கிறது. இதனால், இந்த ஊரை கடந்து, காமாட்சியம்மன் கோவில் தெரு, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, போதியளவில் தண்ணீர் செல்வதில்லை. இதனால், கோடையில் போதிய குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில், தர்மபுரி நகராட்சி பாதாள சாக்கடை குழாய் வாழ்வு உள்ளதால், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைந்து, வீடுகளுக்கு செல்லும் குடிநீரில் கலக்கிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X