கடந்த தேர்தலை விட குறைந்த ஓட்டுப்பதிவு; தளியில் ஆர்வம் காட்டாத மலை கிராம மக்கள் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கடந்த தேர்தலை விட குறைந்த ஓட்டுப்பதிவு; தளியில் ஆர்வம் காட்டாத மலை கிராம மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:58

ஓசூர்: தளி சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலை விட, தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இது, மலை கிராம மக்களிடம், ஓட்டளிக்க ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.


தமிழகத்தின் கடைகோடி தொகுதியான தளி, அதிக மலை கிராமங்களை கொண்டது. இத்தொகுதியில் கடந்த, 2016 தேர்தலில், 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 749 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இதில், தபால் வாக்காளர்கள் உட்பட, ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 350 பேர் ஓட்டளித்தனர். இது, 82.42 சதவீத ஓட்டுப்பதிவாகும். தளி தொகுதியில், கடந்த தேர்தலை விட, தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில், கூடுதலாக ஓட்டுப்பதிவு நடக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை உயர்த்த, ஓட்டுப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை, 348 ஆக உயர்த்தினர். ஆனால், தற்போதைய தேர்தலில், 76.49 சதவீதம் மட்டுமே, ஓட்டு பதிவாகியது. இது கடந்த தேர்தலை விட, 5.93 சதவீதம் குறைவாகும். தபால் ஓட்டுகள் சேர்க்கப்படாமல் உள்ளதால், ஓரிரு சதவீதம் வரை ஓட்டுப்பதிவு உயர வாய்ப்புள்ளது. அப்படி பார்த்தால் கூட, கடந்த தேர்தலை விட, ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. ஓட்டுப்பதிவு மையங்களை அதிகரித்தும், மலை கிராம மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், தளி தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஓட்டுக்களை பெற்று விடாலம் என, கணக்கு போட்டு காய் நகர்த்திய போதும், ஆர்வம் இல்லாமல் மக்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து விட்டனர் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X