ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:12

நாமக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலுக்காக, 2,049 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பதிவான ஓட்டுகள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல், நடக்கிறது. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில், தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இங்கு, மத்திய போலீஸ், மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு பார்வையிடுவதற்கு, கலெக்டர், எஸ்.பி., தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய, மூன்று பேர் மட்டுமே வரமுடியும். மேலும், டி.ஐ.ஜி., தலைமை தேர்தல் அலுவலர் வரலாம். இவை, 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X