குமாரபாளையம் நகர் பகுதியில் அலட்சிய ஓட்டுனர்களால் விபத்து வாய்ப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
குமாரபாளையம் நகர் பகுதியில் அலட்சிய ஓட்டுனர்களால் விபத்து வாய்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:14

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் கட்டுமான கழிவுகள் கொண்டு செல்லும் வாகனங்களால், விபத்து அதிகரித்துள்ளது. குமாரபாளையம் நகரில் பல இடங்களில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது. பழைய கட்டுமான கழிவுகள் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. போக்குவரத்து மிகுந்த சாலையில் செல்லும்போது இதன் துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. தார்ப்பாய் போடாமல் அலட்சியமாக செல்லும் ஓட்டுனர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X