நீர்தேக்கத் தொட்டி சிதிலம்; வீசாணம் மக்கள் அச்சம் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
நீர்தேக்கத் தொட்டி சிதிலம்; வீசாணம் மக்கள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:15

நாமக்கல்: நாமக்கல் ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் குடித்தெரு, தேவேந்திரர் தெரு, கோட்டாந்தோட்டம், ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து வேட்டாம்பாடி, சிட்கோ தொழிற்பேட்டை செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் தெருவில், 2013ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மாரியம்மன் கோவில் அருகே போர்வெல் அமைக்கப்பட்டு அதில் இருந்து தண்ணீர் நிரப்பி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது, அந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து சிமென்ட் கலவை தினமும் உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மக்கள் பீதியுடன் உள்ளனர். தற்போது அந்த தொட்டியின் உள்ளே இருக்கும் கான்கிரீட் கட்டு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளன. மேலும் அந்த தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஏற்றப்படுவதால் மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, அந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X