ஓட்டு எண்ணும் மையம்: தேர்தல் அலுவலர் ஆய்வு | கரூர் செய்திகள் | Dinamalar
ஓட்டு எண்ணும் மையம்: தேர்தல் அலுவலர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:17

கரூர்: ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் மு வடநேரே ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் அருகில், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தில், நான்கு தொகுதிகளுக்குமான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் மு வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடையே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விபரம், பாதுகாப்பு அறைகளுக்கு, 'சீல்' வைக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையிலும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றம் ஓட்டுப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன. இந்த மையத்தில் மூன்று தளங்களிலும் தொகுதி வாரியாக ஓட்டு எண்ணும் அறைகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு, 24 மணிநேர மூன்றடுக்கு பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளது. தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் வினய் பப்லானி, சந்தன் சயன் குஹா, நாராயண் சந்திர சர்க்கார், டி.ஆர்.ஓ., லியாகத், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஷேக் அப்துல் ரகுமான், பாலசுப்ரமணியன், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X