அச்சுறுத்திய ஒற்றை ஆண் யானை மயக்க ஊசி போட்டு பிடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:24

பென்னாகரம்: நெருப்பூர், சுற்றுவட்டார பகுதியில், மக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த, ஒற்றை ஆண் யானையை, வனத்துறையினர் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



தர்மபுரி மாவட்டம், நெருப்பூர் அடுத்த முத்தையன் கோவில், நாகமரை நீர்தேக்கப்பகுதி, ஒட்டனூர், பதனவாடி காப்புக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த, 20 நாட்களாக பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி, 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இதை, அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் அந்த யானை, குடியிருப்பு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்கியும் வந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு யானையை விரட்ட பட்டாசு வெடித்தும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து, நேற்று மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கால்நடை மருத்துவர் பிரகாஷ் நீண்ட போராட்டத்துக்கு பின், காப்புக்காடு பகுதியில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். யானை மயங்கியவுடன், கிரேன் மூலம் யானையை, வனத்துறையினரின் லாரியில் ஏற்றிச்சென்று, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X